Categories
உலக செய்திகள்

வூஹானில் மேலும் ஒரு வைத்தியர் கொரோனா வைரசால் பலி..!!

சீனாவின் வூஹானில் மேலும் ஒரு வைத்தியர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலியாகியுள்ளார்.

சீனாவில் உள்ள ஜாங்னான் வைத்தியசாலை வட்டாரங்கள் அதிகாரப் பூர்வமாக இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 29 வயதான சியா சிசி என்ற அந்த வைத்தியர் கடந்த 19 ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் அவர் வூஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் அந்த வைத்தியர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நேரத்தில் வூஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைத்திய ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே  உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் 2 ஆயிரத்து 592 பேர் இறந்துள்ளனர். மேலும்  77 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |