உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக கூகுள் நிறுவனம் இருக்கிறது. பல கோடி மக்களால் கூகுள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் Google நிறுவனமானது Play Store-ல் செயலிகள் உருவாக்கும் நிறுவனங்களிடம் கெடுபிடி ஆக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. அதாவது ஒரு செயலி Play Store-ல் இடம்பெற வேண்டுமானால் Google Play billing முறையைத்தான் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.
இது தொடர்பான புகாரை மத்திய அரசின் போட்டி ஆணையம் விசாரித்தது. இந்த விசாரணை முடிவடைந்த நிலையில் தற்போது கூகுள் நிறுவனத்திற்கு 939 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த 20-ம் தேதி ஆண்ட்ராய்டு போன்களில் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் கூகுள் நிறுவனத்துக்கு 1337 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரே வாரத்தில் google நிறுவனத்திற்கு 2 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.