தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ் குமார். இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதோடு, சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். இன்னிலையில் ட்விட்டரில் உதவி கேட்ட அஜித் ரசிகர் ஒருவருக்கு ஜிவி பிரகாஷ் உதவி செய்த சம்பவம் தற்போது பலரையும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் கூட ஒரு கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அனுப்பி ஜிவி பிரகாஷ் உதவி செய்திருந்தார். இதே போன்று தான் தற்போது ஒரு கல்லூரி மாணவருக்கும் ஜிவி பிரகாஷ் குமார் உதவி செய்துள்ளார். அதாவது கோவையில் படிக்கும் ஒரு கல்லூரி மாணவர் ஜி.வி பிரகாஷின் டுவிட்டரை டேக் செய்து பதிவிட்டார்.
அதில் நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். அதோடு அருகில் உள்ள ஒரு ஹோட்டலிலும் பகுதி நேரமாக வேலை பார்த்து கல்லூரி கட்டணத்தை செலுத்தி வருகிறேன். ஆனால் திடீரென என்னுடைய அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் தேர்வுக்காக வைத்திருந்த பணத்தை அவரின் சிகிச்சைக்காக செலவு செய்து விட்டேன். தற்போது என்னிடம் தேர்வு எழுதுவதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு பணம் இல்லை.
பணம் செலுத்தவில்லை என்றால் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள். எனவே உங்களால் முடிந்தால் எனக்கு உதவி செய்யுங்கள் அண்ணா என்று பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த ஜிவி பிரகாஷ் உடனடியாக அந்த மாணவரின் google pay நம்பரை வாங்கி அவருக்கு தேர்வு எழுது வதற்கான கட்டணத்தை அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பான பதிவு வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் ஜிவி பிரகாஷ் குமாரின் செயலால் நெகிழ்ச்சி அடைந்து அவரை பாராட்டி வருகின்றனர்.