ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வரும் பெண்மணி மீனா மங்கள். இவர் பத்திரிகையாளரும், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் பணிபுரிகிறார். உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் செய்திவாசிப்பாளராகவும் பணிபுரிந்து வரும் இவர் தற்பொழுது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வருடத்தில் நடந்த ஆப்கானிஸ்தானின் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 15 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர். இதில் 9 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டுள்ளனர்.