கன்னட சினிமா உலகில் ஆறாவது நூறு கோடியை கடந்த திரைப்படமாக காந்தாரா திரைப்படம் அமைந்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலும் 100 கோடி வசூல் திரைப்படங்களை ஹிந்தி திரைப்படங்கள் தான் பெற்றிருக்கின்றது. இதுவரையில் வெளியான திரைப்படங்களில் சுமார் 100 ஹிந்தி திரைப்படங்கள் 100 கோடி வசூலை பெற்ற படங்களாக இருக்கின்றது. தென்னிந்தியாவை பொறுத்தவரை சில தென்னிந்திய திரைப்படங்கள் தான் 100 கோடி வசூலை கடந்து இருக்கின்றது. தமிழில் 30 திரைப்படங்களும் தெலுங்கில் 10 முதல் 15 திரைப்படங்களும் மலையாளத்தில் 7 திரைப்படங்களும் 100 கோடி வசூலை கடந்திருக்கின்றது.
ஆனால் கன்னட திரைப்படங்களில் 100 கோடி வசூலை கடந்த திரைப்படங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றது. கன்னடத்தில் நூறு கோடி வசூலை கடந்த முதல் திரைப்படம் கேஜிஎப் திரைப்படம் தான். அதற்குப் பிறகு இந்த வருடத்தில் வெளியான விக்ராந்த் ரோணா. இதன்பிறகு ஜேம்ஸ், 777 சார்லி, கே ஜி எஃப் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் 100 கோடி வசூலை கடந்த திரைப்படங்களாக இருக்கின்றது. அந்த வரிசையில் தற்போது காந்தாரா திரைப்படம் நேற்று நூறு கோடி வசூலை கடந்து இருக்கின்றது. இந்த படம் மிகச் சிறிய திரைப்படமாக உருவாகி தற்போது அனைவரையும் ஆச்சரியப்படும் வகையில் வெற்றியை பெற்றிருக்கின்றது. கன்னட சினிமாவில் இந்த வருடத்தில் வெளிவந்த ஐந்து படங்கள் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.