உத்தரப் பிரதேச மாநில மின்சார கழக ஊழியர்களின் (Uttar Pradesh Power Corporation Limited (UPPCL)) வருங்கால வைப்புத்தொகை ரூ.2,631.20 கோடி, தனியார் நிறுவனமான திவான் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் (Dewan Housing Finance Ltd (DHFL)) முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
இதற்கிடையில் மற்றொரு ஊழல் வெளியாகி உத்தரப் பிரதேச அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஊர்க்காவல் படை வீரா்களின் கையெழுத்தை போலியாக போட்டு, கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிந்து, டி.ஜி.பி. ஓ.பி. சிங் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். முதல்கட்ட விசாரணையில் போலியான கையெழுத்துக்கள் போடப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அத்துறை உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார். ஊர்க்காவல் படை வீரா்களுக்கு நிரந்தர சம்பளம் கிடையாது. அவர்களுக்கு தினசரி ரூ.500 சம்பளமாக வழங்கப்படுகிறது. அண்மையில் இந்த ஊதியத்தை ரூ.672 ஆக நீதிமன்றம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.