சென்னை அணியில் மேலும் ஒரு இளம் வீரருக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரானது வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது. இப்போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐக்கிய அமீரகத்திற்கு அனைத்து அணிகளும் சென்றுள்ளது. அதேபோல சென்னை அணி வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாட கடந்த 21ஆம் தேதி துபாய்க்கு புறப்பட்டு சென்றனர்..
அங்கு வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா இருக்கிறதா? என பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.. அதில், சென்னை அணி வீரர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.. இந்த நிலையில் மேலும் ஒரு இளம் வீரருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது தொற்று உறுதி செய்யப்பட்டவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது.. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து சென்னை ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் விதமாகவும், அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் செய்தி வந்துகொண்டிருக்கிறது.. முன்னதாக ஐபிஎல் போட்டித்தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா விலகுவதாகவும், துபாயில் இருந்து புறப்பட்டு இந்தியா திரும்பினார் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓவிஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.