Categories
கிரிக்கெட் விளையாட்டு

அன்பை வெளிக்காட்ட யுவராஜ் சிங் முதுகெலும்பை உடைத்தேன்…. நினைவுகளை பகிர்ந்த அக்தர்….!!

தனது அன்பை வெளிக்காட்ட யுவராஜ் சிங்கின் முதுகெலும்பை உடைத்ததாக அக்தர் அவரது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் எப்போதும் அன்பும் விருப்பமான உறவை கொடுப்பவர் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர். அவரைப்போலவே நடவடிக்கைகளும் மிரட்டலாக இருக்கும். அக்தர் விளையாடும் நாட்களில் எப்பொழுதுமே தனது சகாக்களுடன் முரண்படுவார். அவருடன் ஹர்பஜன் மற்றும் சேவாக் போன்றோர் மேற்கொண்ட வாக்குவாதங்களை கிரிக்கெட் ரசிகர்கள் இன்றும் நினைவில் கொண்டிருப்பர். அத்தர் ஓய்வுக்கு பின்னர் இந்தியாவில் கிரிக்கெட் பணிக்காக பணியாற்றினார் மேலும் பல வீரர்களுடன் நட்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.

யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் போன்றோர் ரெஸ்லிங் செய்த சம்பவங்களை சமீபத்தில் அவர் நினைவுகூர்ந்தார். சில சமயங்களில் ரெஸ்லிங்கின்போது சக வீரர்களும் எதிரணியினரை யும் காயப்படுத்தி உள்ளேன் என நகைச்சுவையாக கூறியுள்ளார். ரெஸ்லிங் செய்யவில்லை, என் அன்பை மற்றவர்களிடம் கற்பதற்கான வழி இது. வெளியிலிருந்து பார்த்தால் எல்லை மீறுவது போல் இருக்கும், ஆனால் நான் ஒருவரை விரும்பும்போது, அவர்களிடம் இப்படித்தான் நடந்து கொல்வேன். யுவராஜ் சிங்கை நான் கட்டி அணைக்கும் போது அவரின் முதுகெலும்பு சற்று நெருங்கி போனது. முன்பு அப்ரிடியை கட்டியணைத்து அவரது விலா எலும்புகளை உடைத்தேன்.

மேலும் அப்துல் ரசாக்கும் இப்படி நடந்தது. இதுவே என் அன்பை காட்டும் வழி. என் இளமை நாட்களில் இப்படித்தான் முரட்டுத்தனமாக இருந்தேன்.” என நேர்காணல் ஒன்றில் அக்தர் மனம் திறந்து பேசியுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதில் பெயர் பெற்றவர் அக்தர். சில நாட்களுக்கு முன், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நுழைந்து கொல்கத்தாவில் 1999ல் நடந்த டெஸ்டில் தன் வாழ்க்கையில் முதல் முறையாக சச்சினுக்கு பந்துவீசிய அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.” கிரிக்கெட்டின் கடவுள் என சச்சினை பலர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். உண்மையில் அவர் கிரிக்கெட்டின் கடவுளா ? அவரை அவ்வாறு அங்கீகரிப்பதை நான் ஏற்கவில்லை” என அக்தர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |