பொருளாதார சரிவு கடவுளின் செயல் என்று கூறிய நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து விதிக்கப்பட்டதால், பல தொழில் நிறுவனங்கள் முடங்கிப் போனதால், வணிக ரீதியான செயல்பாடுகள் ஏதும் நடக்காததால் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இது குறித்து பல சமூக ஆர்வலர்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து தங்களது கேள்விகளை சமூக வலைதளங்கள் வாயிலாக எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடவுளை மையமாக வைத்து பகிர்ந்த குறிப்பிட்ட சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து பல கண்டனங்களையும் அவரது கருத்துக்கு எதிர் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில்,
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவுகளை, கடவுளின் செயல் எனக் கூறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.அதில், மனிதன் உருவாக்கிய கூற்றுக்கு கடவுளின் மேல் பழி போடாதீர்கள். கடவுள் இந்த நாட்டின் விவசாயிகளை ஆசீர்வதித்துள்ளார். ஆனால் இந்த இயற்கை பேரழிவையும், மனிதனால் உண்டாக்கப்பட்ட பேரழிவையும் கலந்து பேசுகிறீர்கள் என விமர்சித்துள்ளார்.