Categories
மாநில செய்திகள்

“அந்த டைம்ல துப்பாக்கி சூடு நடத்த தயங்கக்கூடாது”…. போலீசாருக்கு அறிவுறுத்திய டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு திருநெல்வேலி மாவட்ட காவல் ஆயுதப் படையில் நகர்புற பகுதிகளுக்கான புது ரோந்து வாகன திட்டத்தையும், ஆயுதப்படை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் நேற்று (டிச,.24) திறந்து வைத்தார்.

இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின் படி நகர்ப்புற பகுதிகளில் கூடுதல் ரோந்து பணி மேற்கொள்வதற்காக 400 ரோந்து வாகனங்கள் காவல்துறை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

குற்றவாளிகளை பிடிக்க செல்லும்போது காவல்துறையினரை குற்றவாளிகள் தாக்கும் சூழல் ஏற்பட்டால் துப்பாக்கி சூடு நடத்த தயங்கக் கூடாது என அறிவுறுத்தினார். கூலிப் படைக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறப்பு படை உருவாக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கூலிப்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு உள்ளது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |