Categories
கிரிக்கெட் விளையாட்டு

அந்த மனசு இருக்கே…. வலியால் துடித்த எதிரணி வீரர்….வியப்படைய வைத்த கேப்டன் செயல்…!!!

இங்கிலாந்தில் நடந்து வரும் உள்நாட்டு போட்டியில் கேப்டன் ஜோ ரூட்டின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். 

இங்கிலாந்தில் நடந்து வரும் உள்நாட்டு 20 ஓவர் T20 Blast, 2021 தொடரின் 118வது போட்டி நேற்று நடந்தது. இதில் லேன்கஷைர்  Vs யார்க்ஷயர் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய யார்க்ஷயர் அணி 20ஓவரில் 7விக்கெட் இழப்பிற்கு 128ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இதில் ரன் எடுக்க ஓட முயன்று தசை பிடிப்பால்  மைதானத்திலே சுருண்டு விழுந்த லேன்கஷைர்  பேட்ஸ்மேன் ஸ்டீவ் க்ராப்ட்டை ரன் அவுட் செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்தும் எதிரணி வீரருக்காக விட்டுக்கொடுத்த யார்க்ஷயர் கேப்டன் ஜோ ரூட்டின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த போட்டியில்  இரண்டாவதாக களமிறங்கிய லேன்கஷைர் அணி  19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |