Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அந்த நாளில் தான் நடக்கும்” ஆண்கள் மட்டும் பங்கேற்கும்… வினோதமான திருவிழா…!!

அரியலூரில் உள்ள வனக் கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணன்காரன் பேட்டை கிராமத்தில் கொள்ளிடக்கரை காட்டுப்பகுதியில் வனக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆயி,அய்யாவும், ஆகாய வீரன், பாதாள வீரன், நாச்சியார் அம்மன், குதிரைகள் போன்ற தெய்வங்கள் உள்ளது. இந்தக் கோவிலின் திருவிழா சித்ரா பௌர்ணமியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் மட்டுமே கொண்டாடப்படுகின்றது. இந்த கோவிலில் ஆண்கள் மட்டுமே அந்த திருவிழாவில் பங்கேற்று பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். இந்தக் கோவிலில் பெண்களுக்கு எப்போதும் அனுமதி கிடையாது.

இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சித்ரா பெளர்ணமியும் திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று உள்ளது. இந்நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு கழித்து இந்த ஆண்டு சித்ராபௌர்ணமியும், திங்கட்கிழமையும் சேர்ந்து வந்ததால் இந்த கோவிலின் திருவிழா விடிய விடிய நடைபெற்றது. இந்த கோவிலில் திருவிழா இரவு நேரத்தில் தொடங்கி விடியும் வரை நடைபெறும். இதனையடுத்து இந்த கோவிலில் கற்பூரம் ஏற்றி மட்டுமே வழிபடுவது வழக்கம் மற்ற விளக்குகள் ஏற்றி வழிபடமாட்டார்கள்  .

மேலும் இந்த கோவில் உருவாக காரணமாக இருந்த தஞ்சை மாவட்டத்தில் கஞ்சனூர் பகுதி மறலாளிகளுக்கு தான் முதல் பூஜை உரிமை வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆண்கள் அனைவரும் பொங்கல் வைத்து ஆடுகள் பலியிட்டும், ஆலய மணிகள், வீச்சரிவாள் போன்றவற்றை பக்தர்கள் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தியுள்ளனர். மேலும் இந்த திருவிழாவில் சென்னை, திருச்சி, சேலம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மறலாளிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா பரவலை தடுக்க பக்தர்கள் முக கவசம் அணிந்து இந்த திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |