Categories
தேசிய செய்திகள்

அந்தமான் தலைமைச் செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு….. சிறப்பு புலனாய்வு குழு கிடுகிடுபிடி விசாரணை….!!!!

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திரன் நரேன் பதவி காலத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்களை தனது இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அவர்களின் சிலருக்கு பாலில் ஆதாயத்திற்கு பதிலாக வேலையும் வழங்கி உள்ளார். இது குறித்து 21 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர்.எஸ். ரிஷி ஆகியோர் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக போலீசார் கடந்த 1-ந் தேதி, தலைமைச்செயலாளர் ஜிதேந்திர நரைன், தொழிலாளர் நல கமிஷனர் ரிஷி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஓட்டல் அதிபரும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த அக்டோபர் 17ஆம் தேதி உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நரேன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த 18‌ஆம் தேதி அன்று அந்தமான் நிக்கோபார் உயர் போலீஸ் அதிகாரிகள் குழு போர்ட் பிளேயரில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொள்ளடனர். அதனை தொடர்ந்து அவர் இடைக்கால ஜாமின் கேட்டு டெல்லி ஹைகோர்ட் நாடினார்கள். அங்கே நேற்றும் முன் தினம் வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடினார். அங்கு அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை கைது செய்யாமல் இருக்க ஐகோர்ட் தடை விதித்தது. இந்த வழக்கில் கொல்கத்தா ஹை கோர்ட் உத்தரவுபடி சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் நேற்று போர்ட் பிளேயர் சென்றனர். அங்குள்ள போலீஸ் லைனுக்கு ஜிதேந்திரன் நரைன்‌ அழைத்து வரப்பட்டார். அங்கே இன்னொரு புறம் அவருக்கு எதிராக போராட்டமும் நடந்து கொண்டிருக்கிறது. போராட்டக்காரர்கள் கைகளில் சிக்கிவிடாமல் அவர் பாதுகாப்புடன் பின்புற வாசல் வழியாக அழைத்துச் செல்லப்பட்டு அவரிடம் சிறப்பு புலன்விசாரணைக் குழுவினர் 7 மணி நேரம் கிடுகிடு பிடி விசாரணை நடத்தினர். பல்வேறு கேள்விகள் துருவித் துருவி கேட்டு பதில்களை பதிவு செய்தனர். இதனால் அங்கு நேற்று பரபரப்பு நிலவியது.

 

Categories

Tech |