அந்தமானில் தனி தீவில் வசிக்கும் பழங்குடியினருக்கு உதவ சென்ற 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, பழங்குடியின மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் உள்ள தீவுகளில் ஜரூபர் எனப்படும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களை வெளி ஆட்கள் சந்திக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. துண்டிக்கப்பட்ட தீவில் வாழும் இந்த மக்களுக்கு உதவ அந்தமான் ஆதிங் சஞ்சாதி விகாஸ் அமைதி என்ற தன்னாட்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பிலுள்ள ஐந்து ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதை அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தெற்கு அந்தமானில் ஜெர்காடன் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் அந்த அமைப்பின் அலுவலகம் மூடப்பட்டு உள்ளதால். அந்த தீவில் வசிக்கும் ஜராப பழங்குடியின மக்களுக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமோ, என அலுவலர்கள் அச்சம் அடைத்துள்ளனர்.