Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அந்தத் தப்பை மறுபடி பண்ணுறாங்க… காவல்துறையினர் பணியிட மாற்றம்… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…!!

மாமூல் வசூல் வாங்கிய குற்றத்திற்காக போக்குவரத்து காவல்துறையினரை  பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கின்றது. அந்த பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமூல் கொடுக்காதால் லாரி கிளீனர் ஒருவரை சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தாக்கி விட்டனர். இதனால் அந்த லாரி கிளீனர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் படி உயர் காவல்  அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறையினரிடம் விசாரணை நடத்தி இனிமேல் இது போன்று புகார்கள் உங்கள் மீது வரக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் மீண்டும்  அவ்வழியாக செல்லும் லாரிகளை நிறுத்தி டிரைவர்களிடமிருந்து பணம் வாங்கி வருகின்றனர் என்று  மாவட்ட போலீஸ்  சூப்பிரண்டுக்கு அடிக்கடி புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்  அபினவ் என்பவர் லாரி டிரைவர்களிடம் பணம் வாங்கிய  போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்வமணி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வமணி, ஏட்டு செல்வம் மற்றும் ராஜா ஆகிய 4 பேரையும் உடனடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அந்த அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு ஓமலூர் துணை காவல் சூப்பிரண்ட் சங்கீதாவுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி சங்கீதா அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.

Categories

Tech |