ஆந்திர மாநிலம் விஜய நகர மாவட்டத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகளை குப்பை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் அவலம் நேர்ந்துள்ளது.
நெல்லிமர்ல மண்டலம் சராஜ்ஷாப்பு பேட்டா நகரத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் குப்பை ஏற்றிச் செல்லும் நகராட்சி வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். கொரோனாவில் இறந்தவர்களை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்ற ஆந்திர அரசு தற்போது கொரோனா நோயாளிகளையும் ஏற்றிச் செல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர். மேலும் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் கடும் சிரமத்தை எதிர் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் சடலத்தை அகற்றி சுத்தம் செய்யாமல் அடுத்த நோயாளிக்கு ஒதுக்கப்படுவதாக வேதனையுடன் கூறியுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலை நேரத்தில் மட்டும் மருந்து மாத்திரைகளை வழங்கி விட்டுப் சென்றுவிடுவதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர் இதே நிலை தொடர்ந்தால் சிகிச்சைக்காக வருபவர்கள் சடலமாக செல்லும் நிலை ஏற்படும் என்று கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளனர்.