‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜி படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன் ,வெங்கட் பிரபு, விஜய் ,நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘குட்டி ஸ்டோரி ‘. இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி ,அதிதி பாலன், அமலாபால் ,சாக்ஷி அகர்வால், மேகா ஆகாஷ் ,வருண், கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
Happy to share #KuttiStoryTrailer ☺️https://t.co/RzaDxR5jPb
Dir by #NalanKumaraswamy#KuttiStoryFromFeb12#ItsAllAboutLove @AditiBalan @sreekar_prasad @IshariKGanesh @VelsFilmIntl @shammysaga @Ashkum19 @DoneChannel1
— VijaySethupathi (@VijaySethuOffl) February 5, 2021
இந்த படம் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் இந்த படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது . நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் .