அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் நற்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகரான அந்தோனி ஃபாசி “ஒமிக்ரான்” வைரஸ் டெல்டா வகை கொரோனா பரவலை விட வீரியம் குறைவானதாக இருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பேசிய அந்தோனி ஃபாசி ஒமிக்ரான் வைரஸ் வீரியத்தன்மை குறைந்தது என்பதற்கான இறுதியான முடிவுகளை வெளியிடுவதற்கு கூடுதல் தகவல்கள் விஞ்ஞானிகளுக்கு தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் கிட்டத்தட்ட 17 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளுடனான கட்டுப்பாடுகள் குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்த கட்டுப்பாடுகள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நீக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார்.