Categories
உலக செய்திகள்

மாயமில்லை மந்தரமில்லை…. அந்தரத்தில் பறந்த கார்…. வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சி…!!

அமெரிக்கா நாட்டில் அதிவேகத்தில் கார் சென்று தடுப்பு சுவரின் மீது மோதி அந்தரத்தில் பரந்த காட்சிகள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் யூபா நகரில் அதிவேகத்தில் கார் ஓன்று சாலையில் சென்றுள்ளது. அந்த குறுகலான சாலையில் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய நிலையில் காரானது 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. இதனை அடுத்து சாலையின் வளைவில் திரும்பும்போது கார் கட்டுப்பாட்டினை இழந்துள்ளது. இதனால் சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி  அந்தரத்தில் பறந்து மற்றொரு சாலையில் விழுந்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் காரின் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயர் தப்பியுள்ளார். மேலும் கார் அந்தரத்தில் பறந்த வீடியோ காட்சிகளானது வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் படத்தில் காண்பதை விட நேரில் பார்ப்பது என்பது திகிலை ஏற்படுத்துகிறது.

Categories

Tech |