Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“லஞ்ச ஒழிப்பு துறை திடீர் ரெய்டு”…. சார் பதிவாளர் அலுவலகத்தில் 57 ஆயிரம் பறிமுதல்….!!!!!!

சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 57 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் இருக்கின்றது. இங்கு சார்பதிவாளராக சிவக்குமார் இருக்கின்றார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக சிக்கியுள்ள ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வானது மாலை 4:15 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடந்தது. இந்த ஆய்வில் கணக்கில் வராத 57 ஆயிரத்து 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சார்பதிவாளர் சிவகுமார் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |