தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு எதிராக கிளம்பியுள்ள விமர்சனங்களுக்கு தயாரிப்பாளர் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் கடந்த வாரம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க இப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களும் குவிந்த வண்ணம் இருக்கிறது.
ஆனால் படக்குழுவினர் இந்த விமர்சனங்களுக்கு எந்தவித கருதும் தெரிவிக்காமல் இருந்து வரும் சூழ்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “வெற்றி பெறுவது மட்டும் வெற்றி அல்ல. தோற்பது தோல்வியும் அல்ல.
தொடர்ந்து உங்கள் பாதையில் சென்று கொண்டே இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு எதிராக கிளம்பியுள்ள விமர்சனங்களுக்கு அவர் பதிலடி கொடுக்கும் விதமாக இப்பதிவை வெளியிட்டுள்ளார் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.