அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பெண் எம்பி ஒருவர், இந்தியா மத சுதந்திரத்தை மீறுவதாக தீர்மானம் தாக்கல் செய்திருக்கிறார்.
சோமாலிய நாட்டவரான இல்ஹன் அப்துல்ஹி ஒமர், அமெரிக்க நாட்டின் ஜனநாயக கட்சியினுடைய எம்பி ஆவர். இவர் இந்திய நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருப்பவர். இந்நிலையில் அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் சபையில் இவர் இந்திய நாட்டிற்கு எதிரான ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறார்.
இந்திய அரசு, மத சுதந்திரத்தை மீறுகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், அமெரிக்க அரசு, இந்திய நாட்டை சுதந்திரத்தை மீறக்கூடிய குறிப்பிட்ட கவலைக்குரிய நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். எனினும் இந்த தீர்மானம் விவாதம் செய்யப்படுவதற்கு மிகக்குறைந்த வாய்ப்புகள் தான் உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.