Categories
தேசிய செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு… இழுத்து சென்ற உரிமையாளர்… கேரளாவை உலுக்கிய குஞ்சன் – ஜுலி காதல் கதை..!!

கேரளாவில் இரு நாட்களுக்கு முன்பு காரில் நாயை கட்டி இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பற்றிய தகவலை இச்செய்தியில் பார்ப்போம்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நாயின் பெயர் ஜூலி. கடந்த 2017ம் ஆண்டு வெள்ளத்தில் சிக்கிய நாயை யூசப் எடுத்து வந்து வளர்த்தார். அந்த நாய்க்கு ஜூலி என பெயரிட்டு அன்பை பரிமாறி ,சாப்பாடு போட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில் ஜூலி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனது. கஷ்டப்பட்டு தேடி பிடித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார் யூசப். இந்நிலையில் ஜூலியை பார்க்க அடிக்கடி பக்கத்து வீட்டு நாயான குஞ்சன் வந்தது. ஜூலியை பார்ப்பதை தொடர்ந்து வாடிக்கையாக கொண்டிருந்தது.

இதனால் கோபம் அடைந்த யூசப் ஜூலியை பார்க்க குஞ்சன் வருவதை பிடிக்காததால் ஜூலியை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தார். இதையடுத்து தனது காரில் ஜூலியை அமர வைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் ஜூலி காரில் ஏற மறுத்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த யூசப் காரின் பின்னால் கயிறை கட்டி இழுத்துச் சென்றுள்ளார். மேலும் ஜூலி இழுத்து செல்வதை கண்ட குஞ்சன் விடாமல் துரத்திச் சென்றது. மேலும் நாயை கட்டி சென்றதை பார்த்த பொதுமக்கள் யூசப்பிடம் சண்டையிட்டு உள்ளனர். மேலும் போலீசாருக்கு தகவல் அனுப்பியுள்ளனர். பின்னர் காரில் இருந்து மீட்கப்பட்ட ஜூலி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றது.

இதுபற்றி அவரிடம் கூறியபோது மற்ற நாய்களுடன் ஜூலி பழகுவதை பிடிக்காததால், இவ்வாறு செய்வதாகவும், காரில் ஏற மறுத்த காரணத்தினால் அதனை கட்டி இழுத்து சென்றதாகவும் அவர் கண்ணீருடன் கூறினார். தற்போது ஜூலியை விலங்கின ஆர்வலர்கள் ஆசிரியர் கிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு அப்பாக்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. காரில் கட்டி ஜூலியை இழுத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் வைரலானது. தொடர்ந்து ஜூலியை காண மக்கள் கூட்டமாக வந்து செல்கின்றனர். ஆனால் தனது ஜூலி மீண்டும் வருவால் என்று நம்பிக்கையுடன் குஞ்சன் இன்னமும் காத்திருக்கிறது.

Categories

Tech |