Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காதலுக்கு எதிர்ப்பு” காண்ட்ராக்டர் கொலை…… காதலன் உட்பட 2 பேர் பலி…!!

கன்னியகுமாரியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பில்டிங் காண்ட்ராக்டரை பெண்ணின் காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை அடுத்த தெரிசனங்கோப்பு நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவர் பில்டிங் கான்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் பெண் ஒருவரை அம்பலத்தூர்  பகுதியைச் சேர்ந்த தேவானந்த் என்பவர் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்ததோடு தேவானந்தாவை பலமுறை கண்டித்தும் உள்ளார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் பகை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் ஆனந்த் தனது நண்பரான அருள்தாஸ் உடன் அம்பலத்தூர்  பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே தனது மூன்று நண்பர்களுடன் வந்த தேவானந்தா அவர்கள் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு முற்றவே திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு இருவரையும் சரமாரியாக குத்திவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரது உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் ஆனந்த்  சிகிச்சை பலனின்றி உயிர் இழக்க அருள்தாஸ்க்கு தொடர் சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்த பொழுது அருள்குமரன் என்ற வாலிபர் சிக்கினார். அவரிடம் தற்பொழுது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேவானந்த் உட்பட 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |