Categories
உலக செய்திகள்

மீண்டும் ஐ.நா. பொதுச்செயலாளராக விருப்பம்..! ஆதரவு தெரிவிக்கும் இந்தியா… மத்திய வெளியுறவு மந்திரி டுவிட்..!!

ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெஸை தேர்வு செய்ய இந்தியா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ஆன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் ஒன்பதாவது பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றார். வருகின்ற டிசம்பர் மாதம் இறுதியில் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. எனினும் பொதுச்செயலாளராக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் நீடிக்க அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெஸை தேர்வு செய்வதற்கு இந்தியா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச்செயலாளரான ஆன்டனியோ குட்டரெஸை நேற்று முன்தினம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார் . இந்த சந்திப்பிற்கு பிறகு “ஐ.நா. பொதுச்செயலாளரின் தலைமைத்துவத்திற்கு குறிப்பாக இதுபோன்ற சவாலான காலங்களில் இந்திய மதிப்பு அளிக்கிறது, இரண்டாவது முறையாக ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ இருப்பதற்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவிக்கிறது”. என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |