Categories
உலக செய்திகள்

இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவே இல்லையா…? பிரபல நாடுகளின் முயற்சி…. ரஷ்ய அதிபரின் பரபரப்பு பேச்சு….!!

ரஷ்யாவின் அதிபர் வடகொரியாவின் அணு ஆயுத பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளைத் தாண்டியும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலினுடைய தீர்மானத்தை மீறியும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை எப்போவாவது சோதனை செய்கிறது.

இதனால் வட கொரியாவிற்கும், ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்குமிடையே தீவிரமான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேலும் இந்த பிரச்சினையை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கு வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவதற்காக ஜப்பான் அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் முயற்சிக்கிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் அதிபரான புதின் கூறியதாவது, வடகொரியாவின் இந்த அணு ஆயுத பிரச்சனைக்கு தகுந்த தீர்வு காணப்படும் என்றும், ரஷ்யா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் வடகொரியாவினுடைய இந்த அணு ஆயுத பிரச்சினைக்கு சிறந்த வழியை கூற வேண்டும் என்றும், அப்போதுதான் இதற்கான உகந்த தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |