அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு உக்ரைனை நோக்கி ரஷ்ய ரயில் செல்கிறது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 225 நாளை கடந்து நடந்து கொண்டிருக்கின்றது. இதில் ஏராளமான மக்கள் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவுக்கு சொந்தமான ரயில் ஒன்று அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு உக்கிரனை நோக்கி செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இந்த ரயில் ரஷ்யாவின் படைப்பிரிவுக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த ரயில் உக்ரைன் எல்லையிலிருந்து கிட்டத்தட்ட 300 மைல் முதல் 400 மைல் தொலைவில் காணப்படுகிறது. இதனை முன்னாள் பிரித்தானிய ராணுவ உளவுத்துறை அலுவலரான Forbes McKenzie என்பவர் உறுதி செய்துள்ளார். மேலும் மேற்கத்திய நாடுகளை எச்சரிப்பதற்காக கூட ரஷ்யா இதனை செய்திருக்க வாய்ப்புண்டு என அவர் கூறுகிறார். ஆனால் இப்படி அணு ஆயுத தாக்குதல் தொடர்பான தகவல் வெளியாகி இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.