ஆணு ஆயுத வலிமையை மேம்படுத்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கையானது உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலுள்ள சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும் சீனாவும் இருந்து வருகிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இரு நாடுகளும் வணிகத்தில் அதிகளவு வரிகளை விதித்து உலகையே நடுங்க வைத்துள்ளன. இதனை தொடர்ந்து சீனாவில் உகான் நகரில் கொரோனா வைரஸ் உருவாகியதாக அமெரிக்கா சந்தேகித்து வருகிறது. இதனை பற்றி அறிந்து கொள்ளவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உளவு துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த கருத்தை சீனா மறுத்துள்ளது. இந்த நிலையில் சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஏவுகணை தளத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை அமெரிக்கா விஞ்ஞானிகள் அமைப்பு என்று கூறப்படும் எப்.ஏ.எஸ். தெரிவித்துள்ளது.
இது மட்டுமின்றி கடந்த 2 மாதங்களில் இது இரண்டாவது ஏவுகணை தளம் அமைக்கும் பணிகள் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த ஏவுகணை தளத்தில் ராக்கெட்களை சேமித்து வைக்கவும், ஏவுவதற்கு ஏற்றவாறு 110 குழிகள் அமைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன. இதே போன்று சென்ற மாதம் சீனாவின் கான்சு மாகாணத்தில் யுமேன் பாலைவனத்தில் சீனா 120 ககுழிக்களை உருவாக்கியுள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் என்னும் அமெரிக்கா பத்திரிகை செய்தி வெளியீட்டது. இப்போது சீனாவின் வடமேற்கில் 380 கிலோ மீட்டர் தொலைவில் ஹாமி என்ற இடத்தில் இந்த ஏவுகணை தளம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ரஷ்யாவும் அமெரிக்காவும் ஆயுத கட்டுப்பாடு பற்றி பேசி வரும் நிலையில் சீனா இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அதிர வைக்கிறது.
இந்த நடவடிக்கையானது அணு ஆயுத வலிமையை அதிகரிக்கும் செயலாகவே கருதப்படுகிறது. இதனால் அமெரிக்கா மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தகவல் குறித்து அமெரிக்காவின் மூல உபாய கட்டளை மையம் கருத்து ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில் “60 நாட்களில் 2வது தடவையாக சீனா அமைக்கும் ராக்கெட் தளமானது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என பதிவிட்டுள்ளது. குறிப்பாக சென்ற ஆண்டு அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகனிலிருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சீனா அணு ஆயுதங்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்துவதாகவும் 200க்கும் மேற்பட்ட அணுகுண்டுகளை குவித்து அதனையும் இரட்டிப்பாக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.