கொரோனா குறித்த சில கட்டுப்பாடுகளுடன் அமெரிக்க வாசிகள் தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என்று கனடா தகவல் வெளியிட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக முன்னதாக அமெரிக்க குடிமக்கள் எல்லையை கடந்து தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு கனடா தடை விதித்துள்ளது. இந்நிலையில் தற்போது கனடா அரசாங்கம் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் 3 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட நெகட்டிவ் கொரோனா பரிசோதனை சான்றிதழை வைத்திருக்கும் அமெரிக்க வாசிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதாகும்.
அதோடு மட்டுமின்றி கன்னட நாட்டிற்குள் அமெரிக்க வாசிகள் நுழையும்போது அவர்களுடைய விவரம் CAN என்னும் செயலியில் பதிவு செய்யப்படும் என்றும் கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.