Categories
உலக செய்திகள்

இதை கட்டாயமாக அனுமதித்திருக்கக் கூடாது…. ஆப்கனில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு…. கருத்து தெரிவித்த டிரம்ப்….!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக கூடியிருக்கும் பொதுமக்களின் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை அனைத்து நாடுகளும் மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இருப்பினும் காபூல் விமான நிலையத்தின் முன்பாக ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளார்கள்.

இதற்கிடையே காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்திருக்கும் பொதுமக்களின் மீது ஏதேனும் பயங்கரவாத அமைப்பினர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் காபூல் விமான நிலையத்தின் முன்பாக பொதுமக்கள் குவிந்துள்ளார்கள்.

இதனையடுத்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் காபூல் விமான நிலையத்தின் முன்பாக கூடியிருந்த பொதுமக்களின் மீது இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதை ஒரு போதும் அனுமதித்திருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |