Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதி இல்லாமல் செய்யலாமா…? கர்ப்பிணி பெண் உட்பட 4 பேர் பலி… விருதுநகரில் பரபரப்பு…!!

வெடி விபத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் உள்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் காலனி பகுதியில் பிரபாகரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அரசின் அனுமதி இல்லமால் வீட்டிலே பட்டாசு செய்யும் தொழிலை செய்து வருகின்றார். இந்நிலையில் வெடி செய்வதில் அதே பகுதியில் வசிக்கும் செல்வமணி, சூர்யா மற்றும் 4 மாத கர்ப்பிணி பெண் கற்பகவள்ளி போன்றோர் ஈடுபட்டிருந்தனர்.  இதனையடுத்து பிரபாகரன் வீட்டிற்கு  5 வயதுடைய ரெகோபெயம் சல்மான் என்ற சிறுவன் தனது தாயான செல்வமணியை பார்ப்பதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வெடி தயாரித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வெடி ஒன்றோடு ஒன்று உரசியதால்  விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் வீட்டில் உள்ள மொத்த பட்டாசுகளும்  வெடித்து சிதறியதால் அந்தப் பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. மேலும் மளமளவென எரிந்து தீயானது அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவி விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வீட்டிலுள்ள அனைவரும் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறி விட்டனர். இது குறித்து உடனடியாக  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கற்பகவள்ளி, செல்வமணி மற்றும் அவரின் மகன் ஆகிய 3 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

மேலும் இந்த விபத்தில் சூர்யா படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த சூர்யாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கற்பகவள்ளி, செல்வமணி மற்றும் அவரின் மகன் ஆகிய மூன்று பேரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தில் அருகில் இருந்த 15 பேரின் வீடுகள் சேதம் அடைந்ததோடு 8 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து தரைமட்டமாகி விட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்து விபத்தை உண்டாக்கி விட்டு  தப்பிச்சென்ற அப்பல்லோவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |