Categories
சினிமா தமிழ் சினிமா

அனுபமா-பும்ரா திருமணம்…. வேடிக்கையாகவே பார்க்கிறோம் என்று தாயார் விளக்கம்…!!

தன் மகளைப் பற்றி பரவி வரும் வதந்திகளை வேடிக்கையாகவே பார்க்கிறோம் என்று அனுபமாவின் தாயார் கூறியுள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு திருமணம் நடைபெறப் போகிறது என்றும் பிரபல நடிகை அனுபமா தான் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில் இச்செய்தி முற்றிலும் வதந்தி என்று அனுபமாவின் தாயார் சுனிதா கூறியுள்ளார். பேட்டி ஒன்றில் இதுகுறித்து சுனிதா கூறியதாவது, “அனுபமாவும், பும்ராவும் இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கொருவர் பின் தொடர்ந்து வந்தனர். இதனை பிடிக்காதவர்கள் தான் இப்படி இருவரையும் இணைத்து பேசுகின்றனர்.

அனுபமா தற்போது படப்பிடிப்பிற்காக ராஜ்கோர்ட்டிற்கு சென்று உள்ளார். இந்நிலையில் தற்போது பரவி வரும் வதந்திகளை நாங்கள் வேடிக்கையாகவே பார்க்கிறோம்.ஏனென்றால் அதில் உண்மை இல்லை” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |