அணுசக்தி மையங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் முடிந்துள்ளதால், ஈரான் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஈரான் நாட்டில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இப்ராஹிம் ரைசி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அணுசக்தி மையங்களின் உள்ளே எடுக்கப்படும் புகைப்படங்களை ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் (ஐஏஇஏ) பகிர்ந்து கொள்வதற்காக போடப்பட்டிருக்கும் ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது.
இதனால் தங்களுடைய அணுசக்தி மையங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை ஐ.நா விடம் ஒப்படைக்க முடியாது என்று ஈரான் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அணுசக்தி மையங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை ஈரான் நாடே வைத்திருக்கும் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற அவைத் தலைவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து வல்லரசு நாடுகளுக்கும், ஈரான் நாட்டிற்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது என்று கூறப்படுகிறது.