தன்னுடைய குழந்தையும், மனைவியும் நலமுடன் இருப்பதாக விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலிக்கும், நடிகையான அனுஷ்கா சர்மா என்பவருக்கும் கடந்த 2017ஆம் வருடம் டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் அனுஷ்கா சர்மா கர்ப்பம் தரித்தார். எனவே பிரசவத்தின் போது தன்னுடைய மனைவியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறி தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார்.
இந்நிலையில் அனுஷ்கா சர்மாவுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலைவிராட் கோலி மகிழ்ச்சியுடன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தன்னுடைய குழந்தையும் அனுஷ்காவும் நலமுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.