Categories
இந்திய சினிமா சினிமா

எதுவுமே செய்ய முடியவில்லை… அனுஷ்கா வேதனை..!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை அனுஷ்கா, கொரோனா குறித்து உருக்கமாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீனாவில் வுஹான் நகரத்தில் இருந்து உருவெடுத்த கொரோனா என்ற  உயிரை பறிக்கும் வைரஸ் உலக நாடுகளை நிலைகுலைய வைத்தது மட்டுமில்லாமல், இந்தியாவிலும் அதன் கோர பசியை தீர்த்து வருகிறது. அதோடு மட்டும் நின்று விடாமல் தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த பாதிப்பில் இருந்து நம்மை காப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் நடிகை அனுஷ்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக கொரோனா குறித்து பதிவு செய்துள்ளார். அதில், வாழ்க்கையில் நாம் அனைவரும் கற்றுக்கொண்டதை மறந்து, இப்பொழுது அதற்கு மாறாக புதிதாக கற்றுக்கொண்டிருக்கிறோம்.

இதுவரை எதையெல்லாம் செய்ய முடியாதென்று நினைத்தோமோ அதையெல்லாம் தற்போது செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மால் முடிந்தவற்றை இப்பொழுது செய்யமுடியாத நிலைக்கு   தள்ளப்பட்டுள்ளோம். நம்மை காலங்கள் பிரித்து வைத்திருந்தாலும், புவியியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படும்போது ஒற்றுமையாக நிற்கிறோம்.

நம்மை பாதுகாப்பதற்காக பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும் அனைவர்க்கும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது.  அது சிறியதோ, பெரியதோ அந்த கதாபாத்திரத்தை ஒரு மனிதனாக மனித நேயத்துடன் செய்வோம்  என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

 

Categories

Tech |