Categories
மாநில செய்திகள்

“இனிமே குழம்புல இத போடவே முடியாது”… உச்சம் தொடும் சின்ன வெங்காயம் விலை…?

தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த 10 நாட்களாக இரு மடங்கு உயர்ந்து வருகின்றது. இதனால் மக்கள் பலர் அச்சம் அடைத்துள்ளனர்.

கடந்த பத்து நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை இரு மடங்கு உயர்ந்து வருகிறது. திண்டுக்கல் வெங்காய சந்தைக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 8 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு வரும் .ஆனால் தற்போது 2000 மூட்டைகளை வருவதால் வியாபாரிகள் தவித்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த மாதம் 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்னவெங்காயம், தற்போது 145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரையில் சில்லரை விற்பனையில் சின்னவெங்காயம் 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருச்சியில் 120 ரூபாய்க்கும், கோவையில் 170 ரூபாய்க்கும், சென்னை கோயம்பேடு சந்தையில் 130 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அதிக மழை காரணமாக விளை நிலங்கள் வெங்காயங்கள் ஆழுகிவிட்டதால் சின்ன வெங்காயத்தின் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |