முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 52 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவஞ்சலியை பதிவிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில்:“தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணாவை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன். நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் பெயரை சட்டப்பூர்வமாக்கி, இரு மொழிக்கொள்கையே தமிழகத்தில் தொடரும் என வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த சிறந்த மனிதநேய பண்பாளரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறேன்’ என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.