Categories
மாநில செய்திகள்

“அப்படிப்போடு”…. 15 லட்சம் ரூபாய் பரிசு தொகை…. தமிழக அரசு அடுத்த அதிரடி…!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அந்த அடிப்படையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 400 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. மேலும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. ஆவின் பால் விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டது. பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமலில் இருக்கிறது. அதுமட்டுமின்றி நகை கடன் தள்ளுபடி தொடர்பாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்த நலத்திட்டங்களை திமுக தலைமையிலான அரசு அமல்படுத்தி வருகிறது.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது அந்தந்த துறை அமைச்சர்கள் செயல்படுத்த உள்ள புதிய திட்டங்கள் தொடர்பாக தகவல்களை வெளியிட்டனர். அதில் விவசாயத்திற்கான தனி பட்ஜெட் தாக்கல் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன்பின் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் கிராமங்களுக்கு 7.5 லட்சம் ரூபாயும், மாநில அளவில் தேர்வு செய்யப்படும் 3 சிறந்த ஊராட்சிகளுக்கு 15 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு என சிறந்த திட்டங்களை செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து விருது வழங்கப்படும். விருது கொடுப்பதற்காக சிறந்த ஊராட்சிகளை தேர்ந்தெடுக்க தமிழக அளவில் ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குனர் தலைமையிலும், மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு உருவாக்கப்படும். சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் கிராம ஊராட்சிகளை ஊக்கப்படுத்தும் அடிப்படையில் இந்த அரசாணையானது வெளியிடப்பட்டு உள்ளது.

Categories

Tech |