மாநிலம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் திறப்பு விழா நடந்து முடிந்தும் பயனாளிகள் தேர்வில் குழப்பம் நீடித்து வருகிறது.
மாநிலம் முழுக்க குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளை முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார். குடியிருப்புகள் வளாகத்தில் பூங்காக்கள், கடைகள், குடிநீர் உள்ளிட்ட சகல வசதிகளுடன் கட்டுமானம் நடந்து முடிந்தது. பல இடங்களில் பயனாளர்கள் தேர்வு முழுமை பெறாததால், நீர்நிலை ஆக்கிரமிப்பு வசிக்கும் ஏழை, எளிய மக்கள், நிலச்சரிவு மற்றும் பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட வேண்டும்.
ஆனால் குடியிருப்புகளுக்கான அரசு மதிப்பில் 10 சதவீதம் பயனாளிகள் சார்பில் செலுத்த வேண்டி இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த விதிமுறைக்கு உட்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படாமல் ஆளுங்கட்சியின் செல்வாக்கு பரிந்துரையின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதாக பலர் சர்ச்சை கிளம்பியது. இதனால் பயனாளிகள் தேர்வை முறைப்படுத்தும் பணி நடப்பதாக கூறப்படுகிறது.