Categories
லைப் ஸ்டைல்

‘அபார்ட்மென்ட் சிண்ட்ரோம்’… குழந்தைகளை குண்டாக மாற்றும்… மருத்துவர்கள் அதிர்ச்சி..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் செயல்படாத காரணத்தினால் குழந்தைகளின் எடை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் எடை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே குண்டாக இருந்த குழந்தைகள் மேலும் உண்டாகி உள்ளன. இதில் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடியோ கேம், டிவி என குழந்தைகள் எப்பொழுதும் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் குண்டாக இருந்த குழந்தைகள் மேலும் குண்டாகி உள்ளனர்.

அவர்களின் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அப்பார்ட்மெண்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனி என்ற பெயரில் சாக்லேட், பேக்கரி ஐட்டங்கள் ஆகியவற்றை வாங்கிக் கொடுப்பதால் அவற்றை சாப்பிட்டு குழந்தைகளின் எடை அதிகரித்து வருகிறது. இதனை ஆபத்து என்கின்றார் மருத்துவர்கள். கோவை இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியின் குழந்தை நலத்துறை இணை பேராசிரியர் டாக்டர் உமா சங்கர் கூறியதாவது: “பெற்றோர்கள் குழந்தைகளை விளையாட அனுமதிப்பதில்லை.

பள்ளியில் கேம்ஸ் பிரிவில் மட்டும் தான் குழந்தைகள் விளையாடுகின்றனர். மேலும் குழந்தைகள் சாப்பிடும் பாஸ்ட் புட் உணவு மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் கடந்த 10 மாதங்களில் வழக்கத்தைவிட குண்டு குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்பார்ட்மெண்ட் குழந்தைகளின் உடல் பருமனுக்கும், இருப்பிட சூழ்நிலையும் ஒரு காரணம். இதை தான் அபார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்று கூறுகின்றனர். குழந்தைகள் வெளியில் விளையாட வில்லை என்றால் விட்டமின் டி கிடைக்காது.

எலும்பு வளர்ச்சி அடையாது. இது இல்லாததால் சாதாரண காய்ச்சல், சளி கூட குழந்தைகளை எளிதில் தாக்கி விடுகின்றது. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். எப்பொழுதும் குழந்தைகளை வெயிலில் விளையாட வேண்டும். யோகா, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்வதற்கு பெற்றோர்களும் அனுமதிக்க வேண்டும். ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். டிவி, கம்ப்யூட்டர், மொபைல் போன் பார்க்கும் நேரம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

கார்ட்டூன் என்பது பெரிய தீமை என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் உணர்த்த வேண்டும். மொபைல்போன் கையாளுவதை கண்காணிக்க வேண்டும். கடந்த பத்து மாதத்தில் குண்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது” என டாக்டர் கூறியுள்ளார்.

Categories

Tech |