தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி ‘நான்’ திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலை எழுதி அறிமுகமானவர் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின். இவர் ஏற்கனவே விசுவாசம், அண்ணாத்தை படங்களுக்கு எழுதிய புரொமோ பாடல்கள் வைரலாகியது. அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவின் இரங்கல் பாடலை இவர்தான் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இவர் “ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்” என்ற பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் சர்வதேச கீதமாக வெளியாகி உள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் “என்ஜாய் என்ஜாமி” பாடலைப் போல இணையத்தை கலக்கி வருகிறது.
https://youtu.be/xk5s4JMqwkA