தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வாரிசு படத்தின் “ரஞ்சிதமே ரஞ்சிதமே” முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பொங்களுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வந்தது.
அதாவது தெலுங்கில் பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பு வெளியானது. இதனால் வாரிசு படம் பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கலாம் என்று கூறப்பட்டதுஹ இந்நிலையில் தற்போது வெளியாகிய தகவலின் படி வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி என்றும் தள்ளிப் போகும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொங்கலுக்கு விஜயின் வாரிசு, அஜித்தின் துணைவு படங்கள் மோதுவது உறுதியாகியுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.