Categories
பல்சுவை

அப்படி போடு செம!…. ரெட்மி நோட் 12 சீரியஸ் ரிலீஸ் எப்போது தெரியுமா?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!

சியோமி நிறுவனத்தின்‌ ரெட்மி ஸ்மார்ட் போன் பெரும்பாலான மக்கள் அனைவரும் கையில் உள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் சார்பில் ரெட்மி 12 சீரிஸ் வெளியாக உள்ளது. ஆனால் அது எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு பலரிடம் இருந்து வருகிறது. தற்போது அது குறித்து அறிவிப்பை சியோமி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை இன்று அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய 200 MP கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட் போன் என்ற பெருமையை ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் பெறும் என்று சியோமி தெரிவித்துள்ளது.

புதிய 200 MP சென்சார் 1/14 இன்ச் அளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் சூப்பர் QPD ஆட்டோபாக்ஸ் வசதி உள்ளது. மேலும் 16 இன் 1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் உள்ளது. இந்த சென்சார் உள்ள இதர அம்சங்கள் அதிகபட்சம் 4 ட்ரில்லியன் நிறங்களை பிரதிபலிக்க செய்கிறது. இதில் HDR மற்றும் 8K வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரெட்மி நோட் 12 ப்ரோ டீசரின் படி இந்த ஸ்மார்ட் போன் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலில் 50 MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்படுகிறது‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |