தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்ச கதாபாத்திரங்களிகி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் வெளியிடாக ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் விஜயின் வாரிசு படத்துக்கு போட்டியாக இப்பொழுது ரிலீஸ் செய்ய உள்ளனர் மூவிஸ் நிறுவனம் தான் துணியும் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது இந்நிலையில் இந்த படத்தை டிஜிட்டல் ஓடிடி ஒளிபரப்பு உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் தளம் துணிவு படம் டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதன் முறையாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அஜித் படத்தை கைப்பற்றி உள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர்.