Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!…. இனி ரயில்களில் குளு குளு தான்….. பலே பிளான் போட்ட CMRL…..!!!!

சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகரில் உள்ள பகுதிகளை இணைக்க கூடிய வகையில் Suburan எனப்படும் புறநகர் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி, சென்னை கடற்கரை முதல் தாம்பரம், சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு ,சென்னை மூர் மார்க்கெட் முதல் கும்மிடிப்பூண்டி, சென்னை மூர் மார்க்கெட் முதல் திருவள்ளுவர் ஆகிய வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இவற்றில் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புற நகர் ரயில் சேவை தான் அதிகமாக பயணிகள் பயன்படுத்துகின்றனர். இதற்கு போட்டியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் எளிய மற்றும் நடுத்தர மக்களின் பிரதான போக்குவரத்துக்காக புறநகர் ரயில் சேவையை இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு வழிதடத்தில் செல்ல புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்குவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆய்வு செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் பயண அனுபவம், டிக்கெட் கட்டணம், செலவுகள், பராமரிப்பு உள்ளிட்டவை இடம் பெற உள்ளது. இதன் மூலம் புறநகர் ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. வருகின்ற நவம்பர் மாதம் டெண்டர் பணிகள் முடிவடைந்து சரியான நிறுவன அடையாளம் காணப்படும். அதன்பிறகு களப் பணிகள் விறுவிறுப்படையும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் உடன் தமிழக அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஒரு வேளை முழுவதும் ஏசி பெட்டிகளுடன் கூடிய புறநகர் ரயில்கள் இயக்க முடியும் எனில், அதற்கான செலவுகளை ரயில்வே நிர்வாகத்துடன் உரிய முறையில் பகிர்ந்து கொள்வது ஆகியவை பற்றி தமிழக அரசு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது.

Categories

Tech |