தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஜாப் ஹரிஷ் இயக்கத்தில் நடிகர் கதிர் மற்றும் ஆனந்தின் நடித்துள்ள திரைப்படம் யூகி. இந்த படத்தில் நடராஜன் சுப்பிரமணியன், நரேன், பவித்ரா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சின் ராஜ் இசை அமைத்துள்ளார். ஜோமின் படத்தொகுப்பு செய்கிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட இரு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேடை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#YUGI
Releasing this November!! @ZacHarriss @itsNarain @natty_nataraj @anandhiactress @itspavitralaksh @ranjinraj_ @11_11cinema @lightson_media pic.twitter.com/YAiDrTuopo— Kathir (@am_kathir) October 27, 2022