Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம… லேடி சூப்பர் ஸ்டாரின் 81-வது படம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாராஹ இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். நேற்று நயன்தாரா தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகும் 81-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்‌. நயன்தாராவின் 81 வது படமாக உருவாக உள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.

Categories

Tech |