தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று உள்ளது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து மிகப் பிரமாண்டமாக தயாரித்தது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதனால் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை நிறுவனம் சார்பாக உதயநிதி வாங்கியுள்ளாராம். இது குறித்து சமீபத்தில் பேசிய உதயநிதி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை நான் வாங்கியுள்ளேன். அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி இந்த படம் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.