தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவில் மொத்தம் 5 துணை பொதுச்செயலாளர்கள் இருந்தனர். அவர்கள் இ.பெரியசாமி பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர், செல்வராஜ் ஆகியோர் ஆவர். இதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்து விலகிக் கொண்டார். திமுகவில் இருந்து அவர் விலகியதன் பின்னணியில் பல்வேறு அரசியல் சச்சரவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். அது ஒரு புறம் இருக்க மறுபுறம் சுப்புலட்சுமி ஜெகதீசனின் இடத்தை நிரப்ப போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவாகாரம் திமுக உடன் பிறப்புகளிடம் மட்டுமில்லாமல் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கு முக்கிய காரணம் கட்சி விதிகளின்படி துணை பொதுச்செயலாளர் பதவிகளில் ஒரு இடத்தை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தான். எனவே அந்த பதவியை அலங்கரிக்கப் போகும் அடுத்த பெண் யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக முன் வந்து நின்றது. அதனை தொடர்ந்து தெற்க்கில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் இல்லை கொங்கு மண்டலத்திலிருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது.
இதற்குகிடையில் நான்கைந்து பேரின் பெயர்கள் பரிசீலனைக்கு வந்தது. ஆனால் அனைவரையும் ஓரங்கட்டி விட்டு கனிமொழியின் பெயர் லிஸ்டில் முன்னிலை பெற்றிருக்கிறது. இவர் தற்போது திமுக மகளிர் அணி செயலாளர், தூத்துக்குடி மக்களவை தொகுதி ஆகிய பகுதிகளை வகித்து வருகிறார். சமீபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைகுழுவின் தலைவராக கனிமொழியை அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் புதிதாக ஒரு பொறுப்பு கனிமொழியை தேடி வர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற 9 ஆம் தேதி திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக போவதாக தெரியவந்துள்ளது. மேலும் திமுகவை பொறுத்தவரை பொதுவாக பெண்கள் ஓட்டு அதிகம் கிடைப்பதில்லை என்று சொல்லப்படுவது உண்டு. தற்போது கூட இலவச பேருந்து பயண திட்டம் குறித்து அமைச்சர்களின் பேச்சால் பெண்களின் அதிர்த்தியை திமுக சம்பாதித்துக் கொண்டது. எனவே கனிமொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் பெண்களை கவர முடியும் என்றும் பெண் வாக்காளர்களை அதிகரிக்க முடியும் என்று திமுக தலைமை நம்புகிறது.