தலிபான்களின் ஆட்சியில் அபின் வர்த்தகத்திற்கு தடை விதிக்கபடும் என்று கூறிய நிலையில் தற்பொழுது அதற்கு மாறாக அதிக அளவு விற்பனையாகி கொண்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அபின் என்று கூறப்படும் போதைப் பொருளானது உலக அளவில் அதிகமாக ஆப்கானிஸ்தானில் தான் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது மொத்த அபின் பகிர்வில் ஐந்தில் நான்கு பங்கு ஆப்கானிஸ்தானில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்று ஐநா தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தில் அபின் வர்த்தகம் பெரும் பங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அபின் வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். ஆனால் தற்பொழுது அபின் வர்த்தகம் அமோகமாக அங்கு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள சந்தைகளில் சர்வ சாதாரணமாக அபின் விற்கப்பட்டு வருகிறது. மேலும் தாலிபான்கள் அபின் வர்த்தகத்திற்கு தடை விதிப்பதற்கு மாறாக அதன் மீது வரி விதிப்பதன் மூலம் லாபம் ஈட்ட முடியும் என்று முடிவு செய்துள்ளதால் அங்கு முன்பைவிட அபின் விற்பனையானது அதிகரிக்கும் என்று உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அபின் வர்த்தகத்தை தடை செய்யப்போவதாக தற்போது தாலிபான்கள் அறிவித்த பிறகு வியாபாரிகள் அதன் விலையை பன்மடங்கு உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.